தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் கிராம முகாம்கள் மூலம் 9 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை!” : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

“தமிழ்நாட்டில் 2024 - 25ஆம் ஆண்டில் (பிப்ரவரி வரை) மட்டும் 49,512 கிராம முகாம்கள் மூலம், சுமார் 9 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன.”

“தமிழ்நாட்டில் கிராம முகாம்கள் மூலம் 9 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை!” : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 3) பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் 2024 - 25ஆம் ஆண்டில் (பிப்ரவரி வரை) மட்டும் 49,512 கிராம முகாம்கள் மூலம், சுமார் 9 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பால், 3,869 கால்நடை நிலையங்கள், கிளை நிலையங்கள் மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் செயற்கை முறை கருவுறுதல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

“தமிழ்நாட்டில் கிராம முகாம்கள் மூலம் 9 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை!” : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

இந்த நிதியாண்டில், தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் 50.96 லட்சம் கருவுறுதல்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் காரணமாக கன்றுகள் பிறப்பு அதிகரித்துள்ளது.

கிடாரி கன்றுகள் மட்டும் பிறப்பிக்கும் நோக்கில் உறைவிந்து ஆய்வகத்தை, ஊட்டி கால்நடை பண்ணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த ஆய்வகத்தின் வழி, இதுவரை 1,872 கிடாரி கன்றுகள் பிறந்துள்ளன.

மேலும், மருத்துவ சேவைகளுடன் கால்நடை பொருட்களின் உற்பத்தி நடைமுறைகள், நோய் தடுப்பு முறைகள், கால்நடைப் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் போன்றவை குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு முழுவதும் 2021-22ஆம் ஆண்டு முதல், ஆண்டிற்கு 7,760 கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories