மார்ச் 4, 2025 வரை இறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத குரூப் 'சி' பதவிகளுக்கான நிலுவையில் உள்ள அனைத்து தேர்வுகளையும் இரயில்வே துறை ரத்து செய்துள்ளதை குறித்து மக்களவையில் தி.மு.க உறுப்பினர் செல்வகணபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
ரயில்வே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு அண்மையில் தேர்வு நடத்துவதில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள்தான் காரணம் என சொல்ல்படுவது உண்மை என்றால் அதன்மீது அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
உத்தரபிரதேசத்தில் கிழக்கு மத்திய ரயில்வேயின் 26 ரயில்வே அதிகாரிகள் துறைத் தேர்வின் வினாத்தாள்களை கசியவிட்டதாகக் கூறி சிபிஐ கைது செய்த அதிகாரிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
ரயில்வேயில் உள்ள அனைத்து குரூப் "சி" பதவிகளையும் நிரப்ப அரசு தீர்மானித்துள்ள காலக்கெடுயாது?.ரயில்வேதுறை சார்ந்த அனைத்து பதவி உயர்வு தேர்வுகளையும் ஒருங்கிணைக்கப்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகளாக நடத்தும் நோக்கில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தை இரயில்வேதுறை இணைத்துள்ளது குறித்த விவரங்கள் யாவை?
ரயில்வே பாதுகாப்பு தொடர்பான அனைத்து பதவிகளிலும் காலியாக உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை நிரப்ப அரசு முடிவுசெய்துள்ள காலக்கெடு என்ன?
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.