தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ”கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய மாற்றுத்திறகாளிகளை பணி நிரத்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். தற்போது எத்தனை பேருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இந்த அரசாணையை மறு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு தேர்வு நடத்தப்படும். இதற்காக 1200 பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவாக சிறப்பு தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவதற்குள் இந்த சூதர்வுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே சிறப்பு தேர்வுக்கான பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்