தமிழ்நாடு

ரூ.2,000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு! : அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

குளிர்சாதனப் பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய வகையில் 2,000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு அட்டை அறிமுகம்!

ரூ.2,000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு! : அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் குளிர்சாதனப் பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய வகையில் 2,000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்து பயணிகளுக்கு மாதாந்திர சலுகை பயணச்சீட்டை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது,

சென்னை மாநகரில் 1,000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணச்சீட்டுகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 2,000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு அறிமுகப்படுத்தியுள்ளோம்.

ரூ.2,000 ரூபாய் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு! : அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 குளிர்சாதனப் பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும்.

ஆன்லைன் மூலமாக டிக்கெட் வாங்குகின்ற திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக கூடுதல் வசதிகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தரப்படும். ஆயிரம் ரூபாய் மாதாந்திர பயணச்சீட்டில் சாதாரண பேருந்திலும், டீலக்ஸ் பேருந்திலும் பயணம் செய்யலாம். 2000 ரூபாய் மாதாந்திர பயணச்சீட்டில் குளிர்சாதனப் பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யலாம்.

banner

Related Stories

Related Stories