தமிழ்நாடு

”முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” : வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

"முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்" அமைக்கப்படும்.

”முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” : வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.

இக்கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று 2025- 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

1.1000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் "முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்" அமைக்கப்படும்.

2.நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய "நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

3. மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு மேற்கொள்ளப்படும்.

4.மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், 'மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்' செயல்படுத்தப்படும்.

5.உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட 'உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம்' செயல்படுத்தப்படும்.

6. மண்வளத்தினை மேம்படுத்திட "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்". இந்த திட்டத்திற்கு ரூ.142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7.தமிழ்நாட்டில் உள்ள 2338 கிராம ஊராட்சிகளில் "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" செயல்படுத்தப்படும்.

8.ரூ.40 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க "மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்" செயல்படுத்தப்படும்.

9. ரூ.108 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம்.

10. ரூ.52 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்.

banner

Related Stories

Related Stories