விபத்துகள் இல்லாத மாநிலம் என்ற தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் விதமாக, ரூ.200 கோடி மதிப்பில், அதிக விபத்து நடக்கும் பகுதிகளான, குறுகிய வளைவுகள் மற்றும் சாலைச் சந்திப்புகள் மேம்படுத்தப்படும்!
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் வெப்ப அலையால் ஏற்படும் சுகாதார பாதிப்பு மற்றும் உற்பத்தித் திறன் இழப்பினைக் குறைப்பதற்காக தணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாநில அளவிலான வெப்ப அலை செயல்திட்டம் ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் ஆகிய 11 நகரங்களுக்கெனத் தனியே வெப்ப அலை செயல்திட்டங்கள் தயாரிக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், சென்னை மட்டுமின்றி, கோவை. திருச்சி, மதுரை, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் நகரெங்கும் கண்காணிப்புக் கேமராக்கள், முக அடையாளம் காணும் மென்பொருள் அமைப்பு, தானியங்கி வாகன எண் கண்டுபிடிக்கும் கருவி, ஆளில்லா வான்கலம் உள்ளடக்கி, ரூ.75 கோடி மதிப்பீட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
வரும் நிதியாண்டில் 40 ஆயிரம் பணி இடங்களை நிரப்பிட அரசு திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 78,802 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
* ஒன்றிய அரசிடம் இருந்து வரக்கூடிய உதவி மானியங்கள், ஒன்றிய வரிகளின் பங்கு ஆகியவை மாநிலத்திற்கான மொத்த வருவாய் சதவிகிதத்தில் குறைந்து கொண்டே வருகிறது.
* ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் நிதியை நிறுத்தி வைத்தது ஒன்றிய அரசு.
* ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்க மறுத்தது ஒன்றிய அரசு.
* மிக்ஜாம் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.776 கோடி மட்டுமே விடுத்தது ஒன்றிய அரசு.
* இந்த வஞ்சிப்புகள், மாநில அரசின் நிதிநிலையை வெகுவாக பாதித்துள்ளது.
- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோர்களாக்க உயர்த்திட பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.
* இத்திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.
* 2025-26 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியுதவிக்கென ரூ.225 கோடி ஒதுக்கப்படும். நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் தொடர்ச்சியாக மிக அதிக அளவிலும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், 2016 - 17 மற்றும் 2024 - 25 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மாநில அரசிற்கு 45,182 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
தமிழரின் கடல்சார் மரபை மீட்டெடுத்திடவும், தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிடவும், 'தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025' அறிமுகப்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் கடல்சார்ந்த தொழில்கள் அதிகரிக்கப்படும். இவற்றின் மூலம் கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
‘முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்ட’த்தின் கீழ், 2025 - 26 ஆம் ஆண்டில் 6,100 கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள், ரூ. 2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்பிற்கென, மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து நடப்பாண்டிற்கு ரூ.120 கோடி விடுவிக்கப்படும்.
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், 27.11.2024 முதல் 11.03.2025 வரை வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.2,839 கோடி ஊதியம் மற்றும் ரூ.957 கோடி நிதி என மொத்தம் ரூ.3,796 கோடி நிதியை நிலுவை வைத்துள்ளது ஒன்றிய அரசு.
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு!
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் வசதிகளை ஒருங்கிணைக்கும் வகையில், பன்முக போக்குவரத்து முனையம் பயணியருக்கு தேவையான அனைத்து நவீன வசதிகளுடன் கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
சாதி பாகுபாடற்ற, சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து, அவர்களை கெளரவுக்கும் வகையில், 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
பெருநகரங்களில் காற்றுமாசுபாட்டை குறைத்து, சுற்றுச்சூழல்களை மேம்படுத்த சென்னைக்கு 950 மின் பேருந்துகள், கோயம்புத்தூருக்கு 75 மின் பேருந்துகள், மதுரைக்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள், நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு, நவீன மீன்பிடி நடைமுறைகள் அறிமுகம் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், ரூ.50 கோடி மதிப்பீட்டில் கடல்சார் வள அறக்கட்டளை (Marine Resource Foundation) உருவாக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்புடன் கூடிய Co-Working Space, புத்தொழில் முனைவோர், ஐடி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி, தங்களின் இல்லங்களுக்கு அருகிலேயே பெண்களும் பணிபுரிந்திடும் பெரும் வாய்ப்பு முதல்வர் படைப்பகத்தின் மூலம் உருவாகும்.
முதல்வர் படைப்பகம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 30 இடங்களில் உருவாக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில், ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
பசுமைப் பயணத்தின் முதற்கட்டமாக வெள்ளிமலைப் பகுதியில் 1,100 மெகாவாட் திறன் மற்றும் ஆழியாறு பகுதியில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் திட்டங்கள் ரூ.11,721 கோடி முதலீட்டில் பொதுத்துறை - தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முன்னேற்றத்திற்காகவும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்திடவும் சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் சென்னையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அறிவியல் மையம் உருவாக்கப்படும்.
இம்மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப்புலங்கள் (Stem), விண்வெளி, வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் இடம்பெற்றிருக்கும்.
மேலும் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள், ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் வானவியல் நகர்வுகளை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை அனுபவ அரங்குகள், அறிவியல் மாநாட்டு கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமை புல்வெளிகள் என அனைத்து வசதிகளும் இடம்பெறும்.
நீலகிரி மாவட்டம் குன்னூர்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,
சென்னை மாவட்டம் ஆலந்தூர்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை,
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்,
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்
- ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் வழித்தடத்திலும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மார்க்கத்திலும் அதேபோன்று கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் ஆகிய வழித்தடங்களிலும் 160 கி.மீ வேகத்தில் அதிவேக ரயில் போக்குவரத்து உருவாக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
இன்று உலக அரங்கில் சதுரங்க விளையாட்டின் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை இரண்டு உலக சாம்பியன்கள், 31 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் மண்ணில் இருந்து உருவாகியுள்ளனர். மேலும் பல சாம்பியன்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையில், பள்ளி பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திடும் விதமாக, உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர் அவர்கள் வகுத்து தந்த தகவல் நெடுஞ்சாலையில், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களும் இணைந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஓசூர் மற்றும் விருதுநகரில் புதிய டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
* ரூ.160 கோடி மதிப்பீட்டில் 2000 அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* ரூ.56 கோடி மதிப்பீட்டில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* ரூ.65 கோடி மதிப்பீட்டில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
* தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
2025 - 26 ஆண்டில், அரசுப் பள்ளிகளில் 1,721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவர். இதற்கான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
மாணவர்களின் அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்தக்கட்டமாக சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் போட்டித்தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக, தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூட வசதிகளுடன் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும்
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தொடர்ந்து உயர்க்கல்விச் செல்லும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
* மகளிர் நலன் காக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு, இந்த வரவு செலவு திட்டத்தில் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு!
* மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு!
* புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடனுதவி வழங்க திட்டம்.
* புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு.
* காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மேலும் 10 மாவட்டத்தில் ரூ.77 கோடி மதிப்பீட்டில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
* ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் கீழடி, தெலுங்கனூர், வெள்ளலூர், ஆதிச்சனூர், மணிக்கொல்லை, கரிவலம்வந்தநல்லூர், பட்டணமருதூர், நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெறும்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.
வரும் கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு!
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
மூன்றாம் பாலினத்தவரை போக்குவரத்து மேலாண்மைக்கு பயன்படுத்தும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி ஊர் காவல் படைகளில் ஈடுபடுத்த திட்டம்!
முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவரைக் கொண்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில், ரூ.675 கோடி மதிப்பீட்டில், 102 கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்கல் சீராக நடைபெறுவது உறுதி செய்யப்படும்!
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் வரும் கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு!
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், 27.11.2024 முதல் 11.03.2025 வரை வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.2,839 கோடி ஊதியம் மற்றும் ரூ.957 கோடி நிதி என மொத்தம் ரூ.3,796 கோடி நிதியை நிலுவை வைத்துள்ளது ஒன்றிய அரசு.
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு!
2025 - 26 நிதியாண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும். 2030ஆம் ஆண்டிற்குள் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது.
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறாதவர்களும் பயன்பெறும் வகையில், புதிதாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும். இதன்மூலம் மேலும் பல மகளிர் பயன்பெறுவார்கள்.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
‘முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்ட’த்தின் கீழ், 2025 - 26 ஆம் ஆண்டில் 6,100 கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள், ரூ. 2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்பிற்கென, மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து நடப்பாண்டிற்கு ரூ.120 கோடி விடுவிக்கப்படும்.
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தமிழ் மொழி வளர்ச்சியை மேலும் செழுமைப்படுத்தும் நோக்கில், திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகளிலும் 35 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படும். ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கு மொழிப்பெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள்.
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு !
எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள்.
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
இன்றைய தமிழ்நாடு கல்வியில், சுகாதாரத்தில், வேளாண்மையில், தொழில்துறையில் சிறந்து விளங்குவதற்காக விதைகள் நூறாண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சியில் விதைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் வறுமை ஒழிப்பு, தொழில்வளர்ச்சி போன்றவைக்கு தனித்தனியாக முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் தமிழ்நாடு மட்டுமே வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கட்டமைப்பு வசதிகள் என பன்முக வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்பட்டது.
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
“இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டின் நலனை காப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள உறுதியை நாடே பாராட்டி வருகிறது!”
- சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
எல்லார்க்கும் எல்லாம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்!
இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இவர் நிதியமைச்சராக பொறுப்பேற்று இரண்டாவது முறையாக தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசித்து வருகிறார்.