தமிழ்நாடு

"திமுக அரசு ஆன்மீக அரசாக திகழ்வதற்கு இது ஒரு ஆதாரம்" - தருமபுர ஆதீனம் புகழாரம் !

"திமுக அரசு ஆன்மீக அரசாக திகழ்வதற்கு இது ஒரு ஆதாரம்" -  தருமபுர ஆதீனம் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாக மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழா நடைபெற்றது.

இதில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி கே சேகர்பாபு, கழகத் துணை பொதுச் செயலாளர் கனிமொழி,தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலகி மாசிலாமணி தேசிக ஞான சம்மந்த பரமா சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

"திமுக அரசு ஆன்மீக அரசாக திகழ்வதற்கு இது ஒரு ஆதாரம்" -  தருமபுர ஆதீனம் புகழாரம் !

தொடர்ந்து பேசிய தருமபுர ஆதீனம், "முதல்வரின் கலைக்களம் மூன்று நாட்களாக சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகிறது. முதல்வர் அவர்கள் தொடாத துறையே இல்லை என்ற வகையில், அனைத்து துறைகளிலும் அவர் பங்கு பெற்று இருக்கிறார். கலைக்களம் என்ற இந்த தலைப்பே அற்புதமான தலைப்பு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைக்களஞ்சியமாக விளங்குகிறார். 40, 50 ஆண்டு காலமாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த திருக்கோவிலுக்கு எல்லாம் முதல்வர் அவர்கள் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. இந்த அரசு ஆன்மீக அரசாக திகழ்வதற்கு இதெல்லாம் ஒரு ஆதாரம்தான், எப்போதெல்லாம் முகூர்த்த நாள் வருகிறதோ அப்போதெல்லாம் கும்பாபிஷேகம் நடைபெறும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது

banner

Related Stories

Related Stories