தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் வசதிகளை அரசு செய்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் வசதிகளை அரசு செய்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சைதாப்பேட்டை கலைஞர் கருணாநிதி பொன்விழா வளைவு உள்ள பஜார் சாலையிலும், ஜீனிஸ் சாலையிலும் ரூபாய் 2.39 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள மழைநீர் வடிகால் கட்டும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் சைதை மேற்கு பகுதி திமுக மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் வசதிகளை அரசு செய்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

அப்போது பேசிய அவர், சென்னையில் எங்கெல்லாம் மழைநீர் தேக்கம் இருக்கிறதோ அதை கண்டறிந்து அங்கு புதிய மழைநீர் வடிகால் வாய் கட்டுவது, இணைப்பு கால்வாய் ஏற்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் கால்வாயை சீர்படுத்துவது என்று பல்வேறு பணிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. சென்னையில் இதற்கு முன்பு எல்லாம் 4, 5 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும். வாரக்கணக்கில் மழைநீர் தேக்கம் என்பது இருக்கும்.

ஆனால் கடந்த ஆண்டு ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தும்கூட 24 மணி நேரத்தில் மழை பெய்த சுவடு தெரியாத அளவிற்கு சென்னை மாநகரம் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றது. இதற்கு கடந்த 4 ஆண்டுகளில் 3,913 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் கட்டி முடிக்கப்பட்டதே காரணம். சைதாப்பேட்டையில் உள்ள 58 தெருக்களில் புதிய மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டது. அதனால் சைதாப்பேட்டையில் பெரிய அளவில் மழைநீர் தேக்கம் என்பது இல்லாத நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories