தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் பார்த்து பார்த்து செய்யப்பட்டு வருகிறது. சொன்னதையும் தாண்டி சொல்லாத விஷயங்களையும் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கல்வி - மருத்துவம் ஆகிய இரண்டையும் இரு கண்களாக பாவித்து, அதற்கென தனியாக அதிகளவில் நிதி ஒதுக்கி கவனம் செலுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.
அந்த வகையில் மக்களைத் தேடி மருத்துவம் முதல் அண்மையில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகம் வரை, பொதுமக்களின் நலனுக்காக மருத்துவத்துக்கு என்று தனியாக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதாவது கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்" என்ற திட்டம் தொடங்கப்படும் என்றார். இதன் மூலம், பொதுமக்களுக்கு, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்காக மருந்து தொடர்புடைய படிப்பு முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்த்திருந்தது தமிழ்நாடு அரசு. அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் கடந்த பிப்.24-ம் தேதி 1000 'முதல்வர் மருந்தக'ங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த மருந்தகங்களில் சுமார் 75% குறைவான விலையில் மருந்து கிடைக்கும்.
அதாவது தனியாரால் ரூ.70 மதிப்புடைய மருந்து ஒன்று, ஒன்றிய அரசின் மருந்தகங்களில் ரூ.30என்றும், முதல்வர் மருந்தகங்களில் ரூ.11 என்று விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 762 மருந்து வகைகள் அறுவை சிகிச்சைக்கான மருந்துகளும் இங்கு கிடைக்கும். ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் மட்டுமல்ல, சர்ஜிக்கல்ஸ் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
இந்த நிலையில் கும்பகோணத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படவில்லை என்று போலியான செய்தி ஒன்று பரவி வரும் நிலையில், அது போலி என்று தமிழ்நாடு சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, கும்பகோணம் மாவட்டம் என்ற ட்விட்டர் கணக்கில், “முதல்வர் மருந்தகம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் யாரும் விண்ணப்பிக்காததால் தொடங்கப்படவில்லை. மருதாநல்லூரில் முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது.” என்று செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இதற்கு தமிழ்நாடு சரிபார்ப்பகம் (TN Fact Check), “இது முற்றிலும் தவறான தகவல்... தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுர தெருவில் முதல்வர் மருந்தகம் கடந்த 24.02.2025 அன்று திறக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளது.
=> சென்னையில் 39 முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் பற்றிய விவரம் பின்வருமாறு :
1. கொன்னூர் நெடுஞ்சாலை அயனாவரம்.
2. ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை கொடுங்கையூர்.
3. மன்னார்சாமி கோயில் தெரு புளியந்தோப்பு.
4. திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர் அம்பத்தூர்.
5. கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர்.
6. காந்தி தெரு, கே.எம்.நகர் கொடுங்கையூர்.
7. கற்பகவிநாயகர் கோயில் தெரு சென்னை.
8. நாட்டு பிள்ளையார் கோயில் தெரு ஏழுகிணறு.
9. கல்யாணபுரம் தெரு சூளைமேடு.
10. சேமியர்ஸ் சாலை நந்தனம்.
11. லேண்டன்ஸ் சாலை கீழ்ப்பாக்கம்.
12. காமராஜபுரம், பாண்டிதுரை தெரு வேளச்சேரி.
13. வீரராகவராவ் தெரு திருவல்லிக்கேணி.
14. மாநகராட்சி கட்டிடம், சின்னமலை வேளச்சேரி மெயின் ரோடு.
15. நாகேஷ் தியேட்டர் அருகில் தியாகராயநகர்.
16. சுந்தரம் தெரு ராஜாஅண்ணாமலைபுரம்.
17. லஸ் சர்ச் ரோடு மயிலாப்பூர்.
18. செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர் தாம்பரம்.
19. பாரதிநகர் 2-வது தெரு பி.வி.என். ரேஷன் கடை,
20. சாந்திநகர், 3-வது தெரு குரோம்பேட்டை.
21. மந்தைவெளி தெரு புழுதிவாக்கம் பஸ் நிலையம்.
22. புதிய பெத்தானியா நகர் பிரதான சாலை வளசரவாக்கம்.
23. வானகரம் பிரதான சாலை ஆலப்பாக்கம்.
24. பதுவஞ்சேரி பிரதான சாலை, பெரியார் நகர் மாடம்பாக்கம்.
25. காமராஜ் நெடுஞ்சாலை பழைய பெருங்களத்தூர்.
26. பத்தாவது பிளாக் கிழக்கு முகப்பேர்.
27. வ.உ.சி. தெரு, மக்கரம் தோட்டம் கொளத்தூர்.
28. பதினைந்தாவது பிரதான சாலை அண்ணாநகர் மேற்கு.
29. எண்பது அடி சாலை, குமரன் நகர் பெரவள்ளூர்.
30. 4-வது பிரதான சாலை அயனப்பாக்கம்.
31. துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, வெங்கடபுரம் அம்பத்தூர்.
32. மூன்றாவது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன் சேலவாயல்.
33. பெருமாள் கோயில் தெரு, சதுமா நகர் திருவொற்றியூர்.
34. 21வது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ. ஆண்டியப்பன் தெரு வண்ணாரப்பேட்டை.
35. எட்டாவது தெரு, கடற்கரை சாலை எண்ணூர்.
36. பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர் கொளத்தூர்.
37. பி.என்.ஆர். சாலை பழைய வண்ணாரப்பேட்டை.
38. பெரியார் நகர் கொளத்தூர்
39. தமிழ்நாடு தலைமைச் செயலகம் செயலக காலனி.