திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அவருக்கு தொண்டர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அகில இந்திய தலைவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்"-பிரதமர் மோடி வாழ்த்து!
"மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட காலம் நலத்துடன் வாழ வாழ்த்துகள்."- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வாழ்த்து!
"நம் சமூகத்தை பிரிவினைவாதம் அச்சுறுத்தும் வேளையில், அதற்கெதிராக உங்களின் உறுதியான நிலைப்பாடு எங்களை மேலும் ஊக்கப்படுத்துவதாய் அமைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை ஒன்றிணைந்து உறுதி செய்வோம், பிறந்தநாள் வாழ்த்துகள்."- கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து !
"சமூக நீதி கொள்கையில் தங்களின் இலக்கை நிறைவேற்றுவதற்கான பயணம் செழிக்க, பிறந்தநாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்." - பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி வாழ்த்து!
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் உறுதிசெய்யும், நம் ஒன்றிணைந்த போராட்டத்தை தொடர்வோம்."- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து!
"என் சகோதரரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியல் விழுமியங்களை பாதுகாக்க தொடர்ந்து ஒன்றாக செயல்படுவோம்!"- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து!
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட நல்வாழ்வுடன் வாழ வாழ்த்துகள்.” - ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து!