தமிழ்நாடு

ரூ.776.51 கோடி - 1046 அடுக்குமாடி குடியிருப்புகள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.776.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.776.51 கோடி - 1046 அடுக்குமாடி குடியிருப்புகள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.2.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில்659 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 116 கோடியே 55 இலட்சம் ரூபாய்செலவில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்திலுள்ள அனைத்து வருவாய்ப் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி தருவதை தலையாய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், தற்போது இவ்வாரியம் பல அடுக்குமாடி கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், மறுகட்டுமானத் திட்டங்களையும்மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 657.09 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2649 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், 181.74 கோடி ரூபாய்மதிப்பீட்டிலான 401 அடுக்குமாடி குடியிருப்புகள், 56.31 கோடி ரூபாய்மதிப்பீட்டிலான 1603 மனை மேம்பாட்டு திட்டம், 117.17 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 வணிக வளாகங்கள், 67.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 7 வாரிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு 10.88 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 கோட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் திறந்து வைத்தல்

சென்னை மாவட்டம், செனாய் நகரில் 131 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கே.கே நகரில் 51 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள், செங்கல்பட்டு மாவட்டம், இராஜகுளிப்பேட்டையில் 43 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 116 அடுக்குமாடி குடியிருப்புகள்; சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் 433 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 570 அடுக்குமாடி குடியிருப்புகள்;

தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டம், செங்குளத்தில் 116 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 464 அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் 776 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடுவீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories