மக்களின் மனநிலையை அறிய இந்தியா டுடே-சிவோட்டர் இணைந்து கடந்த ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9 வரை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் மூட் ஆஃப் தி நேஷன் என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வாக்குகள் 47 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமான அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் பாஜகவால் சீட் கணக்கைத் தொடங்க முடியாது என்றும் இந்தியா டுடே-சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்புதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, கள முதல்வர், காலை உணவு திட்டம் என மக்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறது. இந்த கருத்து கணிப்பு முடிவு திராவிட மாடல் அரசின் திட்டங்களின் வெற்றியை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.