தமிழ்நாடு

சென்னை திருவொற்றியூரில் பேருந்து நிலையம் : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு !

சென்னை திருவொற்றியூரில் பேருந்து நிலையம் : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருவொற்றியூர் மெட்ரோ பணியின்போது, மாணிக்கம் நகர் பிரதான சாலையில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனை, அஜாக்ஸ் நகருக்கு மாற்றப்பட்டது. இங்கிருந்து தற்போது பிராட்வே, தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினமும் 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

இதற்கிடையே, திருவொற்றியூரில் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து வசதியை ஒருங்கிணைக்கும் வகையில், 14 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தை கட்டுவதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது

சென்னை திருவொற்றியூரில் பேருந்து நிலையம் : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு !

மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பயணிகள் வருகை அதிகரிக்கவும் ஒருங்கிணைந்த நிலையமாக இது அமைய உள்ளது .இந்த புதிய முனையத்தில் பேருந்து நிலையம், பணிமனை ஆகியவை தனித்தனியாக அமைய உள்ளது.

பேருந்துகள் உள்ளே வந்து செல்ல சாலைகள், பயணிகளுக்கான இருக்கை, கழிப்பிட வசதி, போதிய வாகன நிறுத்த வசதி அமைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்ல தனி வசதியுடன் கட்டுமானம் அமைய உள்ளது. டெண்டர் வெளியிட்டுள்ள நிலையில் 12 மாதங்களில் பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

banner

Related Stories

Related Stories