தமிழ்நாடு

மக்களுக்கான அரசு திராவிட மாடல் அரசு : தந்தையின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதலமைச்சர்!

தனது மகளுக்கு செவித்திறன் கருவி பொருத்த உதவ வேண்டும் என தந்தை வைத்த கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

மக்களுக்கான அரசு திராவிட மாடல் அரசு : தந்தையின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆறாம் வகுப்பு பயிலும் தனது மகளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதாகவும், அக்குறைபாட்டினை சரிசெய்திட செவித்திறன் கருவி பொருத்த உதவி செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து அச்சிறுமிக்கு செவித்திறன் கருவி பொருத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மக்களுக்கான அரசு திராவிட மாடல் அரசு : தந்தையின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதலமைச்சர்!

அதன்படி மனு அளித்த நேற்றைய தினம் மாலையே அச்சிறுமிக்கு செவித்திறன் கருவி பொருத்தப்பட்டது. தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் அவர்களுக்கு அச்சிறுமியின் தந்தை சுரேஷ் அவர்கள் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டதோடு, தற்போது தனது மகளுக்கு நன்றாக காது கேட்பதாகவும், இது குறித்து தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் முதலமைச்சர் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், அச்சிறுமியும் தான் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு இக்கருவி பயனுள்ளதாக இருக்கும் என்றும், இக்கருவியை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

banner

Related Stories

Related Stories