அரசியல்

"திமுகவுக்கு வந்த அதிமுக வாக்குகள்,Pro Incumbencyதான் எங்கும் எதிரொலிக்கிறது"- அமைச்சர் செந்தில் பாலாஜி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் கூட திமுகவுக்கு வந்துள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

"திமுகவுக்கு வந்த அதிமுக வாக்குகள்,Pro Incumbencyதான்  எங்கும் எதிரொலிக்கிறது"- அமைச்சர் செந்தில் பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் கூட திமுகவுக்கு வந்துள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில்,

"நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

"திமுகவுக்கு வந்த அதிமுக வாக்குகள்,Pro Incumbencyதான்  எங்கும் எதிரொலிக்கிறது"- அமைச்சர் செந்தில் பாலாஜி!

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி அவர்கள் இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகழகத்தை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார்.

வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்; அதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; “Pro Incumbency” தான் எங்கும் எதிரொலிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக்கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்!"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories