தமிழ்நாடு

MTC தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் : தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி கோரியது போக்குவரத்துத்துறை !

மாநகர போக்குவரத்து கழகத்தில் 600 தாழ் தள மின்சார பேருந்துகள் கொள்முதல் , பயன்பாடு , பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனியாரிடம் ஒப்பந்தபுள்ளி கோரபட்டுள்ளது.

MTC தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் : தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி கோரியது போக்குவரத்துத்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மாநகர் போக்குவரத்துக் கழகத்தை (MTC) உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் (CCP) செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி மாநகர போக்குவரத்து கழகத்தில் தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் 600 தாழ் தள மின்சார பேருந்துகள் கொள்முதல் , பயன்பாடு , பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனியாரிடம் ஒப்பந்தபுள்ளி கோரபட்டுள்ளது.

MTC தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் : தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி கோரியது போக்குவரத்துத்துறை !

வரும் மார்ச் 10 ஆம் தேதி முதல் விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் அளிக்கலாம் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது .ரூ.3 கோடி முன்வைப்பு தொகை செலுத்தி வரும் ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளி அளிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல மின்சார பேருந்துகளுக்கான நடத்துனர் நியமனம் போக்குவரத்து கழகம் சார்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது .அதே நேரம் பேருந்து பராமரிப்பு , ஓட்டுனர் நியமனம் உள்ளிட்டவை Gross Cost Contract அடிப்படையில் தனியார் மூலம் நியமனம் மேற்கொள்ள மாநகரப் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories