தமிழ்நாடு

”மாநில அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது” : ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

மசோதாக்களை கிடப்பில் போட்டு, மாநில அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

”மாநில அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது” : ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததில் இருந்தே அரசுக்கு இடையூராக இருந்து வருகிறார். குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

இப்படி ஜனநாயக விரோத போக்குடன் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழங்கின் மீதான விசாரணை நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது.

ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வாதத்தை தொடங்கிய நிலையில், ஆளுநர் தரப்பு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அரசியலமைப்பு தொடர்பான வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் ஒன்றிய அரசின் வழக்கறிஞருக்கு ஆலோசனை வழங்கினர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்தால் அதற்கான காரணத்தை மாநில அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் மாநில அரசுக்கு எப்படி தெரியும்? என்று கேள்வி எழுப்பினர். மசோதாக்கள் மீது முடிவு எதுவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன நடவடிக்கை? என்ன என்று வினவிய நீதிபதிகள், மசோதாவை நிறுத்தி வைப்பது குறித்து அரசியல் சாசனம் 200 எதையும் கூறவில்லை. அப்படியானால் அடுத்த நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.

பல்கலைக்கழக மசோதா ஒன்றிய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? மசோதாக்களை கிடப்பில் போட்டு, மாநில அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்றும் ஆளுநர் ஆன்.என்.ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்போது குறிப்பு ஏதும் இல்லாமல் அனுப்புவது ஏன் என்று வினவிய நீதிபதிகள், மசோதாவை நிராகரிக்க ஆளுநர் காரணம் தெரிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.

குறிப்பு ஏதும் அனுப்பத் தேவையில்லை என்ற ஒன்றிய அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டனர். நாட்டின் குடியரசுத் தலைவர், அவராகவே ஆளுநரிடம் கேட்டு தெரிந்து கொள்வாரா?, தமிழ்நாடு அரசின் மசோதா விவகாரத்தில், குடியரசுத் தலைவர் எப்போது முடிவை அறிவிப்பார்? என்றும் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories