திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 435 கிராம பஞ்சாயத்துகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’வழங்கும் நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி, மதுரையில் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் முதன்முதலாக 420 ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தோம்.
அதனைத் தொடர்ந்து இன்று இறுதியாக திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் உள்ள மொத்த 438 கிராம ஊராட்சிகளுக்கு சுமார் 720 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி உள்ளோம். ஒரே வருடத்தில் தமிழகத்தில் உள்ள 12,520 பஞ்சாயத்துகளுக்கு 16 ஆயிரத்து 800 எண்ணிக்கையிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி உள்ளோம்.
விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை செய்ய வேண்டும். நூறு வீரர்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கின்ற குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன என்ற ஒரு செய்தி கூட வரக்கூடாது என்பதற்காகவும், விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் சேம்பியன் பவுண்டேஷன் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய அளவிலான போட்டியில் 614 வீரர்களுக்கு தமிழ்நாடு சேம்பியன் பவுண்டேஷன் மூலமாக சுமார் 12 கோடி ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 113 பேர் பதக்கங்களை பெற்று வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் .
தமிழ்நாடு சேம்பியன் பவுண்டேஷன் மூலம் நிதி தேவைப்படுவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .சமீபத்தில் விளையாட்டு துறையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு பணி வழங்கும் விதமாக முதலமைச்சராக அவர்கள் இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே நேரத்தில் 84 வீரர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகளில் முக்கியமான ஒன்றுதான் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வழங்கும் திட்டம். விளையாட்டு என்பது நகரங்களில் மட்டும் அல்ல, குக்கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் சேர வேண்டும் என்பதற்காகதான் முதலமைச்சர் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் .
கலைஞர் என்ற பெயரில் எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன. விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக கலைஞர் பேரில் ஒரு திட்டம் என்பது முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி வெற்றிகரமான வீர வீரங்கனைகளாக வரவேண்டும், பதக்கங்கள் பெற வேண்டும் அதற்கு தமிழக அரசு அனைத்து உறுதுயாக இருக்கும் நன்றாக விளையாடுங்கள் உங்களை பாதுகாக்க தமிழக அரசு உள்ளது"என்று கூறினார்.