தமிழ்நாடு

”பெரியாரை விமர்சிக்கும் இழிநிலைப் பிறவிகள்” : துரைமுருகன் ஆவேசப் பேச்சு!

பெரியாரை விமர்சிக்கும் இழிநிலைப் பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள் என துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.

”பெரியாரை விமர்சிக்கும் இழிநிலைப் பிறவிகள்”  : துரைமுருகன் ஆவேசப் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாற்றுக் கட்சியை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணையும் நிகழச்சி சென்னை அண்ண அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கழக பொதுச் செயலாளர் துரைமுருகன், ”தன்மானம், தமிழ் உணர்வு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை எந்த கட்சி லட்சியமாக கொண்டு நாட்டு மக்களுக்கு விளக்கிக் கொண்டு இருக்கிறதோ அங்கு தான் நீங்கள் வந்துள்ளீர்கள். இளைய சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் தி.மு.க.

நாம் இந்தியை எதிர்ப்போம். சிலர் இந்தியை ஆதரிப்பார்கள். நாம் மாநில சுயாட்சி கேட்போம். இதை எதிர்ப்பார்கள். இவற்றைக்கூட நாம் அரசியல் நோக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், நான் முதுகலை சட்டப்படிப்புப் படித்தவன், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், கழகத்தின் பொதுச் செயலாளர் என பல அந்தஸ்துகளை பெற்று இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஒரேஒருவர்தான். அவர்தான் தந்தை பெரியார். அவர் இல்லாவிட்டால் நான் எங்கோ ஏர்ஓட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன்.

நம்மைப் பற்றி நமக்கே புரியவைத்தவர் பெரியார். இதற்காக அவர் பல அவமானங்களை தாங்கியுள்ளார். தமிழ்ச் சமுதாயத்தை இந்தியாவிலேயே தலைநிமிரச் செய்தவர் தந்தை பெரியார்.நாம் அறிவாளியாக இருக்கக் காரணம் பெரியார். அந்த பெரியாரைத்தான் இன்று எதிர்த்து பேசும் அளவிற்கு இழிநிலைப் பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories