தமிழ்நாடு

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.500 கோடி மோசடி : பா.ஜ.க நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

சேலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.500 கோடி மோசடி செய்த வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.500 கோடி மோசடி : பா.ஜ.க நிர்வாகி உட்பட 3 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயாபானு. இவர் சேலம் அம்மாபேட்டை அருகே திருமணம் மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஒருவருடமாக நடத்தி வந்துள்ளார்.

இங்கு, ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தால், மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் 7 மாதங்களுக்கு பிறகு ரூ.1 லட்சம் திரும்ப வழங்கப்படும் என்று விஜயபானு விளம்பரம் செய்துள்ளார்.

இதனை அறிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரிடம் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இப்படி ரூ.500 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணப் பரிவர்த்தை தொடர்பான எந்த ஆவணங்களும் அங்கு முறையாக பயன்படுத்தப்படவில்லை என்று சேலம் பொருளதாதார குற்றப்பரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தெடர்ந்து, போலிஸார் அங்கு திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் போலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்கு இருந்த ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அறக்கட்டளை உரிமையாளர் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோடி வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையத்து விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேரை போலிஸார் கைது செய்தனர். இதில் விஜயா பானு பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories