தமிழ்நாடு

பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதலாக 500 பேருந்துகள் : மாநகர் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு !

பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதலாக 500 பேருந்துகள் : மாநகர் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். காணும் பொங்கல் நாளன்று சுற்றுலா தளங்கள் நிரம்பு வழியும். இதனால் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதலாக 500 பேருந்துகள் : மாநகர் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு !

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் நாளை (16.01.2025) பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாமல்லபுரம், கோவளம், MGM. வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அட்டவணை பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

மேலும், பயணிகளை பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி / இறக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories