தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அவ்வகையில் நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு நியாய விலை கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்காக அரசு 250 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி- சேலைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் படி, நியாய விலை கடைகளில் நாளை முதல் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் முன்கூட்டியே சீட்டு (token) வழங்கபட்டுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தை நாளை (ஜனவரி 9) சைதாப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது