கொரோனா வைரஸ் தொற்றை இந்த உலகம் இதுவரை மறந்து இருக்காது. இந்த வைரஸ் தொற்றால் உலகம் இழந்தது அவ்வளவு. கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொரோனா தொற்றுக்கு இறையானது இன்னும் நம் கண்கள் முன்னே வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் சீனாவில் தற்போது ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (HMV) என்ற புதிய வைரஸ் பரவுவதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உலக சுகாதார மையம் இந்த வைரஸ் தொற்று குறித்து சீனாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நிமோனியா போன்ற பாதிப்புகளே ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்கிறார்கள் என விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் குளிர் காலத்தில் எப்போதும் சுவாசப் பாதை தொற்று நோய்கள் அதிகரிப்பது இயல்பே. சீன அரசு குடிமக்கள், சுற்றுலா பயணிகளின் உடல் நலனின் எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று நோய் பரவல் ஏதும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த தொற்று நோய் இந்தியாவில் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவிலும் இதற்கு பலத்த பாதுகாப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், HMP வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,
HMPV வகை தொற்று ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது தான் புதிதாக உருமாறிய தொற்று எதுவும் தற்போது பரவவில்லை. HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை. தொற்றுநோய் தடுப்பு ஆய்வகங்கள் 36 உள்ளது. மேலும் அவற்றில் பரிசோதனை செய்ய பி சி ஆர் சோதனை கருவிகளும் உள்ளது. மாநில ஆய்வு மையத்தில் புதியது போன்ற எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை.
தற்போது தமிழகத்தில் இன்புளுவன்சா தொற்றுதான் அதிக அளவில் உள்ளது. இதுவும் சாதாரண பருவ கால காய்ச்சலே. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களை கண்காணித்ததில் இது போன்ற பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பெரிய அளவில் அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்படுத்தும் அளவிலேயே பருவ கால காய்ச்சல் பாதிப்புகள் தமிழகத்தில் உள்ளது.
HMV வைரஸ் என்றால் என்ன?
இந்த வைரஸ் சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் போன்றது. இந்த வைரஸ் சுவாசப் பகுதியை அதிகம் தாக்கும். வைரஸ் தாக்கிய நபரிடம் இருந்து எளிதாக மற்றொரு நபருக்கு இந்த வைரஸ் பரவும் (கொரோனா தொற்றுபோல்).
அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி