தமிழ்நாடு

4-வது முறை... சென்னையில் மீண்டும் வருகிறது மலர் கண்காட்சி... எங்கு, எப்போது ? - விவரம் !

மலை பிரதேசங்களில் மட்டுமே நடைபெறும் மலர் கண்காட்சி தற்போது சென்னையில் நடைபெற உள்ளது.

4-வது முறை... சென்னையில் மீண்டும் வருகிறது மலர் கண்காட்சி... எங்கு, எப்போது ? - விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி தொடங்க உள்ளது. இது சென்னையில் நடைபெறும் 4-வது மலர் கண்காட்சி ஆகும்.

4-வது முறை... சென்னையில் மீண்டும் வருகிறது மலர் கண்காட்சி... எங்கு, எப்போது ? - விவரம் !

இந்த மலர் கண்காட்சியில் தோட்டக் கலைத்துறையில் சார்பில் சுமார் 30 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் பூக்களால் செய்யப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, தொடர்வண்டி, அன்னபறவை, மிக்கி மவுஸ் (mickey mouse) உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சிக்கு தோட்ட கலைத் துறை சார்பாக ஊட்டி, கொடைக்கானல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூச்செடிகளைக் கொண்டு வந்துள்ளதாகவும், இக்கண்காட்சி ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கி 2 வாரங்கள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4-வது முறை... சென்னையில் மீண்டும் வருகிறது மலர் கண்காட்சி... எங்கு, எப்போது ? - விவரம் !

கண்காட்சி நாளை மறுநாள் (ஜன.02) தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூத்தொட்டிகள் அமைக்கும் பணி, பூக்களால் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவுகள் அமைக்கும் பணி, பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட செடிகளை அடுக்கி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

banner

Related Stories

Related Stories