தமிழ்நாடு

2025 புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றங்களும், வாகன நிறுத்த ஏற்பாடுகளும் -முழு விவரம்

2025 புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றங்களும், வாகன நிறுத்த ஏற்பாடுகளும் -முழு விவரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

31.12.2024 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது, இப்புத்தாண்டினை விபத்து இல்லாத கொண்டாட்டங்களாக இருப்பதை உறுதி செய்ய சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான சிரமங்களை தவிர்க்க பின்வரும் போக்குவரத்து மாற்றங்களும், வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளும் முன்மொழியப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.

=> காமராஜர் சாலை மற்றும் எலியட்ஸ் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. கடற்கரை உட்புற சாலை 31.12.2024 அன்று 19.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 19.00 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

2. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை31.12.2024 20.00 மணி முதல் 01.01.2025 06.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.

3. அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

4. டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

5. பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

6. வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது, சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில்) பாரதி சாலை x விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை நடேசன் சாலை x டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பு வரை.

7. தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

8. கொடிமரச் சாலையில், இரவு 20.00 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

9. கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர்கே மட் யூ-திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவநாதன் தெரு, ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெரு (சாய்பாபா கோயில்), நாகேஸ்வர பூங்கா வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

10. வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆ.ர்.பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி, கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாக வாலாஜா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.

11. அனைத்து மேம்பாலங்களும் 31.12.2024 அன்று 22.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.

2025 புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றங்களும், வாகன நிறுத்த ஏற்பாடுகளும் -முழு விவரம்

=> காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

1. சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை நோக்கி - ஒற்றை வரிசை நிறுத்தம்)

2. வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி - ஒற்றை வரிசை நிறுத்தம்)

3. தீவுத்திடல் மைதானம்

4. பொதுப்பணித்துறை மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)

5. பிரஸ் கிளப் சாலை

6. பொதுப்பணித்துறை வளாகம் காவல்துறை வாகனங்கள் மட்டும்

7. கலைவாணர் அரங்கம்

8. விக்டோரியா விடுதி

9. பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை x பாரதி சாலை சந்திப்பில் இருந்து - ஒற்றை வரிசை நிறுத்தம்)

10. லாயிட்ஸ் சாலை (மாற்று திறன் ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் நடேசன் சாலையை நோக்கி - ஒற்றை வரிசை நிறுத்தம்)

11. இராணி மேரி கல்லூரி வளாகம்.

12. லேடி வெலிங்டன் பள்ளி

13. NKT பள்ளி

14. டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி - ஒற்றை வரிசை நிறுத்தம்)

15. பரத் சாரணர் வளாகம்

16. தெற்கு கால்வாய் சாலை (மந்தவெளி நோக்கி)

17. தெற்கு கால்வாய் சாலை (பட்டினம்பாக்கம் நோக்கி)

2025 புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றங்களும், வாகன நிறுத்த ஏற்பாடுகளும் -முழு விவரம்

=> எலியட்ஸ் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. 31.12.2024 அன்று 20.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை 6வது அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

2. 6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு, 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

=> எலியட்ஸ் கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தத்திற்கான செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. பெசன்ட் நகர் 4-வது அவென்யூவில் ஒரு பக்கம் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

2. பெசன்ட் நகர் 3-வது மெயின் ரோட்டில் ஒரு பக்கம் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

3. பெசன்ட் நகர் 4-வது மெயின் ரோட்டில் ஒரு பக்கம் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

4. பெசன்ட் நகர் 5-வது அவென்யூவில் ஒரு பக்கம் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

5. பெசன்ட் நகர் 2-வது அவென்யூவில் ஒரு பக்கம் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

banner

Related Stories

Related Stories