தமிழ்நாடு

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி !

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு, தூக்கு தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஸ் என்பவரும் பேசிவந்த நிலையில், திடீரென சதீஸுடன் பேசுவதை சத்யப்ரியா நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். அதனைத் தொடர்ந்து சதீஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்து வந்தார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, சதீஷ் குற்றவாளி என்பது நிரூபணமானது. பின்னர் சதிஷை குற்றவாளி என அறிவித்து டிசம்பர் 27ம் தேதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி !

தண்டனை விவரங்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், குற்றவாளி சதீஷ், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வயதான பெற்றோர் இருப்பதாலும் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சதீஷ் கேட்டுக்கொண்டார்.

எனினும் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குற்றவாளியை தூக்கு தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

அபராத தொகை 35 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாய் பலியான சத்திய பிரியாவின் சகோதரிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தீர்ப்பை உறுதி செய்வதற்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories