தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல்முறை... வாகன இரைச்சலை தடுக்கும் வசதி... காவலர்களுக்கான நவீன கருவி அறிமுகம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக வாகன இரைச்சலை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கான நவீன கருவி அறிமுகப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறை...  வாகன இரைச்சலை தடுக்கும் வசதி... காவலர்களுக்கான நவீன கருவி அறிமுகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தினமும் பரபரப்பாக காணப்படும் சென்னை பெருநகரத்தின் போக்குவரத்து நெரிசலை கையாளுவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர் போக்குவரத்து காவல்துறையினர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் சாலையில் நின்று போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு வாகனத்தின் இரைச்சல்கள் மூலம் செவித்திறனின் அளவு 90 டெசிபலில் இருந்து 150 டெசிபல் வரை பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு மனிதனின் சராசரி செவித்திறன் அளவு 80 டெசிபல் ஆக உள்ள நிலையில், தொடர்ந்து 90 முதல் 150 டெசிபல் வரை போக்குவரத்து காவலர்கள் தினமும் 8 மணி நேரம் வாகன இரைச்சல் சத்தத்தை கேட்டு செவிதிறன் பாதிப்பு ஏற்படுத்தவும் மன அழுத்தத்தை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறை...  வாகன இரைச்சலை தடுக்கும் வசதி... காவலர்களுக்கான நவீன கருவி அறிமுகம்!

இச்சிக்கலை தவிர்க்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒவ்வொரு போக்குவரத்து காவலர்களுக்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனிப்பயன் இயர் பிளக் (Ear Plug) என்னும் வெளி சத்தத்தை குறைக்கும் கருவியை அறிமுகப்படுத்தப்பட்டு, சோதனை முறையில் இந்த கருவி நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவலர்களின் பயன்பாட்டில் வந்துள்ளது.

போக்குவரத்தில் இருந்து வரும் அதிக அளவிலான ஓலி அலையும், இரைச்சல் அளவை தடுக்கிறது, உரையாடலை தெளிவாக கேட்கவும், நீண்ட நேரம் பயன்பாட்டிலும் சௌகரியமான உணர்வையும் தரும் இந்த கருவி இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை போக்குவரத்து காவலர்கள் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories