தமிழ்நாடு

மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பூங்காக்கள்! : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதிகோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பூங்காக்கள்! : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை, கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர, பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தமிழ்நாடு அரசு.

அவ்வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் உரையின் போது, திருச்சி மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, திருச்சியில் திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பூங்காக்கள்! : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

இதன்படி, திருச்சியில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் புதிய டைடல் அமைக்கப்பட உள்ளது. தரைத் தளம் மற்றும் 6 தளங்களுடன் இது அமைய உள்ளது. 18 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டைடல் பூங்காவில் 5000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கம், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இது அமைய உள்ளது.

இதன்படி, 289 கோடியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

banner

Related Stories

Related Stories