தமிழ்நாடு

அண்ணா பல்கலை. விவகாரம்: “ஞானசேகரன் திமுக அல்ல; அதிமுக - பாஜக சதி செய்கிறது” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!

அண்ணா பல்கலை. விவகாரம்: 
“ஞானசேகரன் திமுக அல்ல; அதிமுக - பாஜக சதி செய்கிறது” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், கடந்த டிச.23-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவி மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சி உள்ளிட்டவைகளை கொண்டு விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை கொண்டு தேடி வந்த நிலையில், புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு இடது கால் மற்றும் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து மாவு கட்டு போட்ட பின்னர், சைதாப்பேட்டை நீதிபதி சுல்தான் ஹர்ஹான் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.

அண்ணா பல்கலை. விவகாரம்: 
“ஞானசேகரன் திமுக அல்ல; அதிமுக - பாஜக சதி செய்கிறது” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக மற்றும் பாஜகவினர் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (டிச.26) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு :

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கும், திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுகவைச் சேர்ந்தவர் என்பது போன்ற பொய்யான தகவல்கள் செய்திகளில் பரவி வருகிறது. ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. வெறும் புகைப்படங்களை வைத்து அமைச்சர்களுடன் தொடர்புபடுத்துவது தவறானது. சிலர் திமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். இந்த வழக்கில் உடனடி நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.

அண்ணா பல்கலை. விவகாரம்: 
“ஞானசேகரன் திமுக அல்ல; அதிமுக - பாஜக சதி செய்கிறது” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!

இதுபோன்று குற்றவாளிகள் மீது கட்சிகளை தொடர்புபடுத்தி பேச வேண்டும் என்றால், அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். இந்தியாவையே நடுங்க வைக்கும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பாஜக ஆட்சியில் தான் அரங்கேறியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை வைத்து அதிமுக பாஜக சதி செய்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் நிர்மலா தேவி என்ற பேராசிரியை, மாணவிகளை பாலியல் தொழிலுக்கு ஆளாக்க முயற்சி செய்தார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பத்தை அதிமுக ஆட்சியில் மூடிமறைக்க பார்த்தனர். அதுமட்டுமல்லாது, அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்ததால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பயந்தனர். ஆனால் இந்த சம்பவத்தை வெளிப்படையாக விசாரித்து வருகின்றோம். எனவே அதிமுக யோக்கியதையை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்." என்றார்.

அண்ணா பல்கலை. விவகாரம்: 
“ஞானசேகரன் திமுக அல்ல; அதிமுக - பாஜக சதி செய்கிறது” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!

பின்னர், பாஜக - அதிமுக ஆட்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "“ராமேஸ்வரத்தில் அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மருமகன் ராஜேஷ் கண்ணன் என்பவர் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படங்களை வைத்து பெண்களை மிரட்டினாரா என்பது குறித்தும் விரைவில் விசாரணையில் தெரியவரும்.”

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான். பாதிக்கபட்ட பெண் துணிச்சலோடு புகார் அளிக்க அரசின் மீது இருந்த நம்பிக்கையே காரணம்." என்றார்.

அண்ணா பல்கலை. விவகாரம்: 
“ஞானசேகரன் திமுக அல்ல; அதிமுக - பாஜக சதி செய்கிறது” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பதில் வருமாறு :

"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட நபர் வைத்திருந்த மொபைல் போனில் உள்ள வீடியோக்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் குறித்தோ, குற்ற வழக்கு குறித்தோ FIR உள்ளிட்ட எந்த விவரமும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. ற்றவாளியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது.

மாணவி வன்கொடுமை தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்." என்றார்.

banner

Related Stories

Related Stories