மு.க.ஸ்டாலின்

நல்லகண்ணு 100: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு தோழர் நல்லகண்ணு பெயர் - முதலமைச்சர் உத்தரவு!

திருவைகுண்டம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்திற்கு தோழர் நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நல்லகண்ணு 100: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு தோழர் நல்லகண்ணு பெயர் - முதலமைச்சர் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அய்யா அவர்களின் 100-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தோழர் நல்லகண்ணுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதனை முன்னிட்டு, தோழர் நல்லகண்ணு பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, அன்னாரின் பெயரைச் சூட்டிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

நல்லகண்ணு 100: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு தோழர் நல்லகண்ணு பெயர் - முதலமைச்சர் உத்தரவு!

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லகண்ணு அய்யா அவர்களின் 100-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அன்னார் அவர்கள் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.

கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லகண்ணு அய்யா அவர்களின் பெருமையைப் போற்றும்வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்” எனப் பெயரிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories