கன்னியாகுமரியில் 2000ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, உலக பொதுமறையை எழுதிய திருவள்ளுவருக்கு 133அடி உயர சிலை திறக்கப்பட்டது.
அச்சிலை நிறுவப்பட்டு 25ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையடுத்து, அதற்கான 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட நூலகத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று முதல் 31.12.2024 வரை நடைபெற இருக்கிறது.
இவ்விழாவை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் திருவள்ளுவர் குறித்த 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட நூலக அலுவலர்கள், நூல் படிப்போர் வட்டத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.