மதுரையை சேர்ந்தவர் கார்த்திக் இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான GST வரி பாக்கி செலுத்துவதற்காக பி.பி குளம் வருமான வரித்துறை அலுவலகத்தில் GST பிரிவு பிரிவில் துணை கமிஷனராக இருக்கும் சரவணக்குமாரை அணுகினார்.
அப்போது, GST வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு ரூ 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்தத் தொகையை கார்த்திக் கொடுக்க விரும்பவில்லை.
பின்னர் இது தொடர்பாக சி.பி.ஐ அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படியும் பிபி குளம் அலுவலகத்தில் கண்காணிப்பாளர்கள் அசோக் குமார், ராஜ்பீர் ராணா ஆகியோர்களிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வழங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் இருவரையும் மடக்கிபிடித்தனர். விசாரணையில் இந்த தொகையை துணை கமிஷனர் சரவண குமார் தான் வாங்க சொன்னது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூன்று பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.