அரசியல்

“அழுகிய முட்டைகள் ஒரு குழந்தைக்கு கூட வழங்கப்படவில்லை!” : அண்ணாமலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. எந்த நிலையிலும் அழுகிய முட்டைகள் ஒரு குழந்தைக்கு கூட வழங்கப்படவில்லை.”

“அழுகிய முட்டைகள் ஒரு குழந்தைக்கு கூட வழங்கப்படவில்லை!” : அண்ணாமலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம், மதிய உணவு திட்டம் என கல்விக்கு பசி தடையாக இருந்திட கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் இந்திய அளவில் பல மாநிலங்களில் பல கோடி மக்கள் பயன்பெறுவதற்கு முன்னோடி திட்டங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக, இத்திட்டங்களை மிகுந்த கவனத்துடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில், அது குறித்து அவதூறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

அந்த அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் பகுதி ஒன்றில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“அழுகிய முட்டைகள் ஒரு குழந்தைக்கு கூட வழங்கப்படவில்லை!” : அண்ணாமலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி!

உண்மை என்னவெனில், கிராமமேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, குறிழ்த்துறையில் உள்ள மையத்திற்கு வாரத்திற்கு தேவையான 197 முட்டைகள் பெறப்பட்டதில், 192 முட்டைகள் நல்ல நிலையிலும், 5 முட்டைகள் அழுகிய நிலையிலும் இருந்ததை சத்துணவு அமைப்பாளர்கள் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தாமல் தனியாக எடுத்து வைத்துள்ளனர்.

அதே போல குழித்துறை அரசு கிராம தொடக்கப்பள்ளி மையத்திலும் 96 முட்டைகள் பெறப்பட்டதில் ஒரு முட்டை மட்டும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இந்த முட்டையும் தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு முன்பு அனைத்து முட்டைகளும் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிந்த பின்னரே, மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

அழுகிய முட்டைகளுக்கு பதிலாக புதிய நல்ல நிலையில் உள்ள முட்டைகளும் சம்பந்தப்பட்ட முட்டை ஒப்பந்தக்காரர்களிடம் பெறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்ற பொய்யான செய்தியினை, ஆராயாமல் எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், அண்ணாமலை அவர்களால் எப்படிதான் இப்படி அறிக்கை விட மனம் வருகிறதோ தெரியவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. எந்த நிலையிலும் அழுகிய முட்டைகள் ஒரு குழந்தைக்கு கூட வழங்கப்படவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஆதாரத்துடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்” விளக்கத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories