தமிழ்நாடு

48-வது சென்னை புத்தகக் காட்சி : 17 நாட்கள்... 900 அரங்குகள்... எப்போது தொடங்கும்? - முழு விவரம்!

48-வது சென்னை புத்தகக் காட்சி : 17 நாட்கள்... 900 அரங்குகள்... எப்போது தொடங்கும்? - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் புத்தக பிரியர்களுக்காகவே சென்னையில் புத்தகக் கட்சி நடைபெறும். இந்த புத்தகக் காட்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பலரும் வருகை தந்து புத்தகத்தை வாங்கி செல்வர். அந்த வகையில் 48-வது சென்னை புத்தகக் காட்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிச.27-ம் தேதி முதல் ஜன.12-ம் தேதி வரை சென்னை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

இந்த புத்தகக் காட்சியானது, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் டிச.27-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் தொடங்கி வைக்கவுள்ளனர். இத்துவக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள்.

48-வது சென்னை புத்தகக் காட்சி : 17 நாட்கள்... 900 அரங்குகள்... எப்போது தொடங்கும்? - முழு விவரம்!

புத்தகக் காட்சியின் விவரங்கள் :

* புத்தகக்காட்சி வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்

* விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

* மொத்தம் 17 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

* மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

* அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% கழிவு வழங்கப்படுகிறது.

* பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், திருநங்கை பிரஸ் LLP ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்கு அமைக்கின்றார்கள்.

* சூழலியல் சார் பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளது.

48-வது சென்னை புத்தகக் காட்சி : 17 நாட்கள்... 900 அரங்குகள்... எப்போது தொடங்கும்? - முழு விவரம்!

* தமிழ்நாடு கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, அவர்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட சிறப்புத்தன்மை வாய்ந்த கைத்திறப் பொருட்களை உலகம் முழுதிலிருந்தும் புத்தகக் காட்சிக்கு வருகை தரக்கூடிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பூம்புகார் சார்பில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 2000 சதுர அடியில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

* மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.

* தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஒன்றிய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக்டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள். இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது.

* உலக அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களான PENGUIN RANDOM HOUSE INDIA, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது. சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் பதிப்பகமும் பங்கேற்கிறது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது .

* நிறைவுநாள் நிகழ்வில் நீதியரசர் ஆர். மகாதேவன் (உச்சநீதிமன்றம்) பங்கேற்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories