தமிழ்நாடு

திருவண்ணாமலையில் மண் சரிவு : மீட்பு பணிகளை துரித படுத்திய அமைச்சர் எ.வ.வேலு!

திருவண்ணாமலையில், மண் சரிவில் சிக்கிக் கொண்ட 7 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலையில் மண் சரிவு : மீட்பு  பணிகளை துரித படுத்திய அமைச்சர் எ.வ.வேலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அண்ணாமலையார் கோயில் மலை மீது மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவால், மலை மீது இருந்த 40 டன் எடை கொண்ட பாறை, அடிவாரத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்கு மேல் விழுந்ததில், வீட்டினுள் இருந்த ராஜ்குமார் - மீனா அவரது குழந்தைகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா, வினோதினி, மகா ஆகிய 7 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

தகவலின் பேல் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மழை மற்றும் மண் சரிவை அடுத்து, அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் அருண்குமார் சைகா தலைமையிலான 30 கொண்ட மீட்பு படையினர் அண்ணாமலையார் மலையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

banner

Related Stories

Related Stories