தமிழ்நாடு

”நாடு முழுவதும் 39 வானிலை ரேடார்” : திமுக MP எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

வானிலை ஆராய்ச்சி மற்றும் முன்னறிவிப்பு உட்கட்டமைப்பை வலுப்படுத்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என மாநிலங்களவையில் தி.மு.க MP இராஜேஸ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

”நாடு முழுவதும் 39 வானிலை ரேடார்”  : திமுக MP  எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வானிலை ஆராய்ச்சி மற்றும் முன்னறிவிப்பு உட்கட்டமைப்பை வலுப்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என தி.மு. MP கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,”மத்திய நீர் ஆணையம் அடையாளம் காணப்பட்ட நதியிடங்களிலும், ஒழுங்கு முறைக்காக அடையாளம் காணப்பட்ட நீர் தேக்கங்களின் வரத்து வெள்ள முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது. இதற்காக மாநில அரசு திட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து 340 நிலையங்களில் வெள்ள முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக இந்திய வானிலை ஆய்வு துறை மூலம் இணைய தளங்கள் வழியாக வெள்ளம் குறித்த ஆலோசனைகள் வெளியிடப்படுகிறது. வேளாண்மை பேரிடர் மேலாண்மை மற்றும் நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வானிலை ஆய்வு கணிப்புகளின் துல்லியம் மற்றும் செயல் திறனை மேம்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக புனேயில் சிறப்பு மெய்நிகர் மையம் நிறுவப்பட்டு புவி அறிவியலில் முன்னேற்றம் மற்றும் நுட்பங்களை மேம்படுத்த கவனம் செலுத்தி வருவதோடு ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டு கட்டமைப்பில் நினைக்க தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் புவிய அறிவியல் முழுவதும் புதிய தொழில்நுட்பங்களின் விரிவான பயன்பாட்டை உறுதி செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு துல்லியத்தை கண்காணிப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை பரப்புதல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை சிறப்பு மெய்நிகர் மையம் ஏற்றுக் கொள்கிறது.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 39 டாப்ளர் வானிலை வேடர்கள் நிறுவப்பட்டு, அதன் மூலம் 24 மணி நேரமும் வானிலை ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வானிலை ஆராய்ச்சி மற்றும் முன்னறிவிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த கண்காணிப்புகளை அமைப்பை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories