சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவர்காலி பணியிடங்களுக்கான தேர்வினை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளோம்.
2026 வரை 1021 பணியிடங்கள் நிரப்பட்டது. தற்போது 2553 இடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியிடங்களுக்கு 23,917 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின்
விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தேர்வு எழுத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27 ஆம் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் முன்க்கூட்டியே தேர்வினை நடத்தி பணியிடத்தை நிரப்பவுள்ளோம். முதல்வர் அவர்கள் உத்தரவின்படி ஜனவரி 5ஆம் தேதி தேர்வு 2,553 மருத்துவர்களுக்கான தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்ய கூடுதல் பணியாளர்களை எம்.ஆர்.பிக்கு கொடுத்து விரைவாக நிரப்படும்.
பல்வேறு வழக்குகளினால் சில பதவி உயர்விடயங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்போது வழக்கு முடிவுக்கு வந்து ஒரு வாரகாலமாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 296 உதவி பேராசிரியர்கள் இணை பேராசியர்களாக உயர்வு பெற்றுள்ளனர். 110 பேர் இணை பேராசியர்கள் பேராசியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதே போல் இணை இயக்குனர்களாக இருந்த 4பேருக்கு கூடுதல் இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு வாரகாலத்தில் 428 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக பணியாற்றிய தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1200 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.மொத்தம் 2140 பேருக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி 2ஆம் தேதி கிண்டி மருத்துவ பல்கலைகழகத்தில் நடைபெறுகிறது.
மருத்துவர் சங்கத்தினர் சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் என இன்று தி இந்து நாளிதழில் வெளியான தகவல் தவறு. அவர்களிடம் ஏற்கனவே இது குறித்து பேசிவிட்டோம்..மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவர் மறுப்பு அறிக்கைக்கொடுக்கவுள்ளனர். காலிப்பணியிடங்கள் குறித்து வெளிப்படையாக அறிவுத்துள்ளோம். தமிழ்நாட்டில் பருவமழை சிறப்பு முகாம்கள் மூலம், ஒன்றரை மாதத்தில் 2,68,086 பேர் பயன்பெற்றுள்ளனர்" என்று கூறினார்.