தமிழ்நாடு

“ஒன்றிய அரசின் போக்கு, பாசிசத்தின் உச்சம் - நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்”: துணை முதலமைச்சர்!

“ஒன்றிய அரசின் போக்கு, பாசிசத்தின் உச்சம் - நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்”: துணை முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம், ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமம், குப்பதாசன் காட்டுவளவு பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தி. இவரது கணவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணி புரிந்து படிக்க வைத்தார்.

இதில் இவரது இளைய மகள் புனிதா கடந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி, அதில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார்.

இருப்பினும், ராசிபுரம் பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து மீண்டும் தேர்வு எழுதிட பயின்று வந்ததாக கூறப்படுகிறது. புனிதா பாரா மெடிக்கல் தேர்வும் எழுதி அதிலும் தேர்ச்சி பெற்ற நிலையில் அவருக்கு அரசு கல்லூரியில் பயில இடம் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி புனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது தாய் இது குறித்து எடப்பாடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே, உடலை கைப்பற்றிய காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“ஒன்றிய அரசின் போக்கு, பாசிசத்தின் உச்சம் - நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்”: துணை முதலமைச்சர்!

இதன் வழி, ஒன்றிய பா.ஜ.க அரசினால் முன்னெடுக்கப்படும் பொது நுழைவுத் தேர்வினாலும், அவர்களால் ஒதுக்கபடும் மாணவர் சேர்க்கை இருக்கைகளாலும், தமிழ்நாட்டு மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது என்பதற்கு இந்நிகழ்வு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

இது குறித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது X வலைதளப் பக்கத்தில், “சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை புனிதா, நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

நீட் சூழ்ச்சியால் தங்களுடைய அன்பு மகளை இழந்து தவிக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் நீட் அநீதியால் எத்தனை உயிர்கள் போனாலும், ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒருமித்த குரலில் நீட் வேண்டாம் என்று சொன்னாலும், அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசின் போக்கு, பாசிசத்தின் உச்சம்.

7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories