தமிழ்நாடு

"இந்தியாவில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

"இந்தியாவில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைத்திட வல்லுநர்களின் விரிவான கருத்துக்களை செயல்படுத்துவதற்கான பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் கருத்தரங்கில் மருத்துவ துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், " கேரளாவில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 18 என்ற அளவில் உள்ளது. அவர்களை விட மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே நோக்கம். மகப்பேறு மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு உடற்பயிற்சி யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் பலனளித்துள்ளது.யோகா பயிற்சி ,மூச்சு பயிற்சி போன்றவை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கி வருகிறோம்.

சுகப் பிரசவங்கள் மாநிலம் முழுவதும் அதிககரிக்க வேண்டும் என கூறியிருக்கிறோம். இந்தியாவில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்.மருத்துவர்கள் சமூக வலைதளங்கள் வழியே அரசு மருத்துவமனை சேவைகளை பிரபலப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் அதன் மூலம் அரசு மருத்துவ சேவைகளை விளம்பர படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

"இந்தியாவில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "மகப்பேறு இறப்பை குறைக்க தாய்மை எண்ணத்துடன் சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் மகப்பேரு மரண விகிதம் கடந்த ஆண்டு ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக இருந்தது. அது தற்போது 44.5 ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள மகப்பேரு மருத்துவமனைகளில் கர்பினி பெண்களுக்கு யோகா பயிற்சி பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஒன்றிய அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோக பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளது.

சுகப்பிரசவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மகபேரு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு மரணம் பூஜியத்தை எட்டியுள்ளது. தாய்மார்களுக்கான மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 99.9 % பிசரவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. இதில் 59% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 8.70 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 5.04 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது. 3.87 லட்சம் தனியார் மருத்துவமனைகளில் மகபேரு பிரசவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் உள்ள சீமாங் செண்டர்களில் மட்டும் 80% பிரவங்கள் நடைபெற்றுகிறது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories