தமிழ்நாடு

ரூ. 2 கோடி கேட்டு 14 வயது சிறுவன் கடத்தல் : 3 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்!

மதுரையில் பணத்திற்காக கடத்தப்பட்ட 14 வயது சிறுவனை போலிஸார் 3 மணி நேரத்தில் மீட்டனர்.

ரூ. 2 கோடி கேட்டு 14 வயது சிறுவன் கடத்தல் : 3 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்!
news
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை எஸ் .எஸ் .காலனி பகுதியில் வசித்து வருபவர் ராஜலெட்சுமி. இவருக்கு நெடுஞ்சாலை பகுதியில் வனிகவளாகம்,வீடுகள் உள்ளது. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில் இன்று ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற சிறுவனை மர்ம கும்பல் ஒன்று ஆட்டோவோடு சேர்த்து கடத்திச் சென்றது. பின்னர் அந்த கும்பல் ராஜலெட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ. 2 கோடி கேட்டு மிரட்டியுள்ளது.

பின்னர் இது குறித்து ராஜலெட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலிஸார் உடனே சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து மர்ம கும்பல் காரில் தப்பிச் செல்வதை போலிஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலிஸார் சிறுவனை கடத்தி சென்ற கும்பலை விரட்டி சென்றது. பிறகு போலிஸார் பின்தொடர்வரை அறிந்த அந்த கும்பல் சிறுவனையும், ஆட்டோ ஓட்டுநரையும் மதுரை - புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்து தப்பி சென்ற கடத்தல் கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கடத்தப்பட்ட சிறுவனை 3 மணி நேரத்தில் மீட்ட போலிஸாருக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories