தமிழ்நாடு

மூக்கு வலியாக மூளைக்கு செல்லும் அமீபா : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !

மூக்கு வலியாக மூளைக்கு செல்லும் அமீபா : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரளாவில் மூக்கு வலியாக மூளைக்கு சென்று அதனை சேதப்படுத்தும் அமீபா பாதிப்பால் 4 பேர் மரணமடைந்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதார துறை இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்ள்ளது.

அதன் விவரம் :

  • அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரிய வகை மூளை தொற்று நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்.

  • கேரளாவில் இந்த நோய் தொற்றால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

  • நீரில் இருந்து இந்த நோய் தொற்று பரவுவதால் கலங்கலான, மாசு உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் நீர் நிலைகளை சுத்திகரிக்க வேண்டும்.

மூக்கு வலியாக மூளைக்கு செல்லும் அமீபா : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !
  • பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள நீச்சல் குளங்களை பொது சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுத்திகரிக்க வேண்டும்.

  • ஊரக பகுதியில் உள்ள நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், அனுமதி இன்றி நுழைவதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

  • அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மையங்களில் இந்த நோய் தொற்று பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் இருந்தால் அவர்களை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற சூடான நன்னீர் நீரில் வாழும் இந்த வகை அமீபாக்கள் மனிதருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஏரி, குளங்களில் குளிக்கும்போது இந்த அமீபா நம் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும்.பின் மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும். இதனால் அதிகபட்சம் உயிரிழப்புகள் வரை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories