தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை - குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை  - குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் நேற்று கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னை வடக்கு மண்டல கூதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில், 10 அதிதீவிர தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஆற்காடு பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ் மற்றும் அருள் ஆகிய 8 பேரை அதிதீவிர தனிப்படை போலீசார் கைது செய்ததுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories