தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் Capgemini நிறுவனம் : 5000 பேருக்கு வேலை வாய்ப்பு!

சென்னையில் ரூ. 1000 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை அமைக்க உள்ளதாக Capgemini நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் Capgemini நிறுவனம் : 5000 பேருக்கு வேலை வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தற்போது பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில் நுட்ப துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் முதல் ஐ.டி. சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளைப் பெற்று வருகிறது. இதனால் நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐடி சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான Capgemini, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், Capgemini அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6 லட்ச சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய  தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், 5000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த கேம்பஸ் கட்டி முடிக்கப்படும் என்று கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  கேம்ஜெமினி தற்போது அறிவிக்கப்பட்ட முதலீட்டில் சுமார் ரூ.3 கோடியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்குவதாகவும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories