தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் நடந்த அதானி குழும நிலக்கரி ஊழல் : விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை!

முந்தைய அதிமுக ஆட்சியில் அதானி குழும நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசின் லஞ்சஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியுள்ளது.

அதிமுக ஆட்சியில் நடந்த அதானி குழும நிலக்கரி ஊழல் : விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முந்தைய அதிமுக ஆட்சியில் அதானி குழுமத்திடமிருந்து நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரியில், தமிழ்நாடு அரசுக்கு தரமற்ற நிலக்கிரியை மூன்று மடங்கு அதிக விலைக்கு அதானி குழுமம் விற்பனை செய்ததாக கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் 6 ஆயிரத்து 66 கோடி ரூபாய் அளவுக்கு அதானி குழுமம் லாபம் ஈட்டியதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்துமாறு அப்போதைய அதிமுக அரசிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. 2012 மற்றும்16 ஆம் ஆண்டு காலத்தில் அதானி குழுமத்திடமிருந்து 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்ததில், ஊழல் நடைபெற்றதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் அப்போதைய அதிமுக அரசு விசாரணை நடத்தவில்லை.

இந்நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் அதானி குழு நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணையை 2 மாதங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories