தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம் : “அண்ணாமலை CBI விசாரணை கேட்பதற்கு இதுதான் நோக்கம்” - ஆர்.எஸ்.பாரதி தாக்கு !

கள்ளக்குறிச்சி விவகாரம் : “அண்ணாமலை CBI விசாரணை கேட்பதற்கு இதுதான் நோக்கம்” - ஆர்.எஸ்.பாரதி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கள்ளக்குறிச்சி மெத்தனால் விவகாரத்தில் அண்ணாமலை போன்றவர்கள் CBI விசாரணை கேட்பதற்கான நோக்கம், அவர்களது ஆட்கள் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களை காப்பாற்றுவதற்காகதானோ என்ற சந்தேகம் இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "கள்ளக்குறிச்சி மெத்தனால் விவகாரத்தில் CBI விசாரணை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது செய்த ஊழலுக்காக வழக்கு தொடரப்பட்டபோது, நீதிமன்றம் CBI விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் ஓடோடி உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி.

CBI-யை விசாரிக்க சொல்வது இந்த வழக்கை தாமதப்படுத்தி வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை மறைப்பதற்கு முயற்சி செய்வது என்பதாகதான் தெரிகிறது. CBI வழக்கை உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் 2016ல் 570 கோடி ரூபாய் கண்டைனர் வழக்கில் இன்று வரை சிபிஐ விசாரணையில் அந்த பணம் யாருக்கு சொந்தம் என்று இன்றுவரை கூறவில்லை அந்த வழக்கை முடிக்கவில்லை.

கள்ளக்குறிச்சி விவகாரம் : “அண்ணாமலை CBI விசாரணை கேட்பதற்கு இதுதான் நோக்கம்” - ஆர்.எஸ்.பாரதி தாக்கு !

அண்ணாமலை போன்றவர்கள் சிபிஐ விசாரணை கேட்பதற்கான நோக்கம் தெரிகிறது அவர்களது ஆட்கள் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா அவர்களை காப்பாற்றுவதற்காக சிபிஐ விசாரணையை கேட்கின்றனர். ஒன்றிய அரசு நினைத்தால் ஒருவர் மீது இடி சிபிஐ சோதனை அவர்கள் பாஜகவில் இணைந்தால் சோதனை நிறுத்தம் என செயல்பட்டு வருகிறது.

சிபிசிஐடி விசாரணை நேர்மையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. சிடிசிஐடியும் விசாரணை ஆணையமும் விசாரிக்கிற போது நிச்சயம் நியாயமாக இருக்கும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

எந்த முதலமைச்சரும் சட்டமன்றத்தில் சொல்லாத வகையில் எதிர்க்கட்சி வாருங்கள் பதில் கூறுகிறேன் என்று அழைத்தார் ஆனால் வரவில்லை. நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்து விட்டது. இதற்கு பிறகு சிபிசிஐடி விசாரணை நடைபெற்ற வருகிறது. விசாரணை முடிவில் நிச்சயம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தெரியவரும்.

எதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும்? ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கும்பகோணத்தில் மகா மகாமகத்தில் 100 பேர் உயிரிழந்தனர், ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்தாரா? அதிமுக ஆட்சியில் சாராயம் குடித்து உயிரிழப்பின்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? சும்மா அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம்.

மெத்தனால் வந்தது பாண்டிச்சேரியில் இருந்துதான் அதனால் பாண்டிச்சேரி முதலமைச்சர் ராஜினாமா செய்வாரா? அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா? அரசியலுக்காக இரண்டு நாள் அவர்கள் பேசுவார்கள் தற்போது மக்களே புரிந்து கொண்டார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரம் : “அண்ணாமலை CBI விசாரணை கேட்பதற்கு இதுதான் நோக்கம்” - ஆர்.எஸ்.பாரதி தாக்கு !

எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் கேள்வி எழுப்பலாம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்தவர்களை கூண்டோடு பணி இடை நீக்கம் செய்துள்ளார். அந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வந்துள்ளார்.‌ இதற்கு முன்பு இதுபோல் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் பார்த்துக் கொண்டுள்ளது. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கொடுத்த குட்டுதான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கும். கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் காவல் அதிகாரிகளை அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால் வேதனைதான்.

விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடைபெறுகிறது என்றால், இதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா? யாரேனும் திட்டமிட்டு இந்த செயலை செய்தார்களா? இது சரியா? என்பது விசாரணையில் தான் தெரிய வரும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த விவகாரம் ஒருபோதும் எடுபடாது. காரணம் எங்கள் பிரசாரத்தில் இது குறித்து விளக்கி கூறி நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

banner

Related Stories

Related Stories