தமிழ்நாடு

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை : ஒரே ஆண்டில் 3 லட்சம் பேருக்கு சிகிச்சை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு தற்போது ஒரே ஆண்டில் 3 லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை : ஒரே ஆண்டில் 3 லட்சம் பேருக்கு சிகிச்சை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான 59 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "பேரிடர் காலத்திலும் பல்வேறு சவல்களை தாண்டி மருத்துவராக உருவாக உள்ள மருத்துவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குறிப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு தற்போது ஒரே ஆண்டில் 3 லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்து மருத்துவ சேவை ஆற்றி வருகிறது. பல்வேறு புகழ் பெற்ற உயர் மருத்துவர்களும் பத்மபூஷன் விருது பெற்ற மருத்துவர்களும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களும் இந்த கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பயின்ற பெருமை உண்டு..

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை : ஒரே ஆண்டில் 3 லட்சம் பேருக்கு சிகிச்சை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையை பொறுத்தவரை இந்த அரசாங்கம் பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பல்வேறு புதிய பாட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது..கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நாள்தோறும் புறநோயாளிகளின் எண்ணிக்கை 2500 பேர் மட்டுமே வந்து கொண்டிருந்தனர்.

தற்போது இந்த நிலை மாறி, தற்போது உள்ள அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, மருத்துவமனையின் கட்டமைப்புகள் மாற்றி மேம்படுத்துவதும்,மருத்துவ மாணவர்களின் சிறப்பான மருத்துவ சேவைகளை பாராட்டியும், நம்முடைய சிறப்பான மருத்துவர்கள் சேவை காரணமாகவும் தற்போது தினந்தோறும் 4500 க்கும் மேற்பட்ட புது புறநோயாளிகள் வருகிறார்கள்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இன்னொரு கூடுதல் சிறப்பம்சமாக சென்னையில் பல்வேறு மருத்துவமனைகள் இருந்தாலும் தீ காயத்திற்கு தீர்வு என்றால் அது கீழ்பாக்கம் மருத்துவமனையாக மட்டுமே இருந்து வருகிறது.தற்போது பழைய மருத்துவக் கட்டிடம் ஒன்றுக்கு பதிலாக 125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

21 கோடி மதிப்பீட்டில் சீமான் என்ற புதிய கட்டிடம்,அதே போல் 196 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவின் உதவியோடு தற்போது பெரிய கட்டிடம் என்று பல்வேறு கட்டிடங்கள் கட்டும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும்மிக விரைவில் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திறந்து வைக்கப்பட உள்ளது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories