தமிழ்நாடு

கழக அரசின் 40-க்கு 40 வரலாற்று வெற்றிக் கொண்டாட்டம் : கோவையில் தொடங்கிய முப்பெரும் விழா !

கழக அரசின் 40-க்கு 40 வரலாற்று வெற்றிக் கொண்டாட்டம் : கோவையில் தொடங்கிய முப்பெரும் விழா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது. .

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி களம் கண்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 40-ஐயும் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக. இந்த மாபெரும் வெற்றிக்கு முதலமைச்சரின் வியூகம் மட்டுமின்றி கட்சி தொண்டர்களின் விவேகம், கூட்டணி கட்சிகளின் உத்வேகம் என அனைவரும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

கழக அரசின் 40-க்கு 40 வரலாற்று வெற்றிக் கொண்டாட்டம் : கோவையில் தொடங்கிய முப்பெரும் விழா !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல் தற்போது 40 நமதாகிவிட்டது. விரைவில் நாடும் நமதாகும் என்று அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தமிழ்நாடு கண்ட இந்த வரலாற்று வெற்றிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் இது மக்கள் திராவிட மாடல் அரசுக்கு கொடுத்த முறையான அங்கீகாரம் என்று பலரும் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த சூழலில் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் விதமாகவும், இதற்கு காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடும் விதமாகவும் கோவையின் கொடிசியா மைதானத்தில் தி.மு.கழகம் சார்பில் இன்று (ஜூன் 15) முப்பெரும் விழா நடைபெறுகிறது.

கழக அரசின் 40-க்கு 40 வரலாற்று வெற்றிக் கொண்டாட்டம் : கோவையில் தொடங்கிய முப்பெரும் விழா !

இந்த விழாவில் கழக தலைவர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா, ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு முதலமைச்சருக்கும், கழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories