தமிழ்நாடு

”தமிழ்நாட்டிற்கு மீண்டும் துரோகம் செய்த ஒன்றிய அரசு” : தயாநிதி மாறன் MP கண்டனம்!

வரிபகிர்வில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருவதாக தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

”தமிழ்நாட்டிற்கு மீண்டும் துரோகம் செய்த ஒன்றிய அரசு” : தயாநிதி மாறன் MP கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எல்லிஸ் புரத்தில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடத்தை அமைச்சர் சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் MP, ”முதலமைச்சர் உத்தரவின் படி மக்கள் பணியே மகேசன் பணி என்பது போல் துறைமுகம் பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்று ரூ.1.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டடத்ததை திறந்து உள்ளோம்.

இந்தியாவிலே, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பா.ஜ.கவையும், பிரதமர் மோடி, அமித்ஷாவை எதிர்த்து தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர்கள் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்.

நேற்று மாநிலங்களுக்கு வரிபகிர்வாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு வெறும் 5 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு 25 ஆயிரத்து 69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான பீகாருக்கு 14 ஆயிரத்து 56 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.10 ஆயிரத்து 970 கோடியும், மகாராஷ்ட்ராவுக்கு ரூ.8 ஆயிரத்து 828 கோடியும் நிதி பகிர்வு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது பா.ஜ.க அரசு.

மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், அடக்கமாக, அமைதியாக, மரியாதை உடன் மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories