தமிழ்நாடு

கோவையில் அண்ணாமலை தோற்றால்... பந்தயம் கட்டி நடு ரோட்டில் மொட்டையடித்துக் கொண்ட பாஜக தொண்டர் !

கோவையில் அண்ணாமலை தோற்றால்... பந்தயம் கட்டி நடு ரோட்டில் மொட்டையடித்துக் கொண்ட பாஜக தொண்டர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. இந்த சூழலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் பாஜக உள்ளது.

இதனிடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40-க்கு 40 என்று வென்று அசத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கிடைத்த மக்களின் மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாடு முழுவதுமே மக்கள் இந்தியா கூட்டணிக்கு தங்கள் அமோக ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கோவையில் அண்ணாமலை தோற்றால்... பந்தயம் கட்டி நடு ரோட்டில் மொட்டையடித்துக் கொண்ட பாஜக தொண்டர் !

இந்த சூழலில் கோவையில் போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை தோற்றதால், பாஜக தொண்டர் ஒருவர் நடு ரோட்டில் மொட்டையடித்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. கோயம்பத்தூரில் பாஜக சார்பில், மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். தமிழ்நாடு முழுவதும் பாஜக வெற்றி பெரும் என்றும், அண்ணாமலை சுமார் 1 லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் பாஜகவினர் மார்தட்டி கொண்டனர்.

ஆனால் அண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பாஜகவும், அதன் கூட்டணியும் ஒரு தொகுதி கூட வெல்லவில்லை. மேலும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தற்போது கிடைத்துள்ள வாக்கு வங்கியும் அதன் கூட்டணி கட்சிகளுடையது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலை தோற்றதற்கு கோவையின் பல்வேறு பகுதிகளில் மட்டன் (ஆடு) பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

கோவையில் அண்ணாமலை தோற்றால்... பந்தயம் கட்டி நடு ரோட்டில் மொட்டையடித்துக் கொண்ட பாஜக தொண்டர் !

இந்த நிலையில் கோவையில் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்று மாற்றுக்கட்சியினருடன் பந்தயம் வைத்து தோற்ற நிலையில், பாஜக தொண்டர் ஒருவர் நடு ரோட்டில் வைத்து மொட்டையடித்துக்கொண்ட காட்சி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்.

பாஜகவின் தொண்டரான இவர், தேர்தலுக்கு முன்னர் மாற்றுக்கட்சியினரிடம் பந்தயம் வைத்துள்ளார். அதாவது கோவையில் அண்ணாமலை வெற்றி பெறவில்லை என்றால், தனது மீசையை மழித்துகொண்டு, மொட்டையடிப்பதாக கூறியுள்ளார். இந்த சூழலில் அண்ணாமலை தோல்வியடைந்ததால், தொண்டர் ஜெய்சங்கர் தற்போது நடு ரோட்டில் வைத்து மொட்டையடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories