தமிழ்நாடு

”கலைஞரின் அனுபவங்களை கண்டு வியந்து இருக்கிறேன்” : நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!

கலைஞர் ஐயாவின் அனுபவங்களைக் கண்டு வியந்து இருக்கிறேன் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

”கலைஞரின் அனுபவங்களை கண்டு வியந்து இருக்கிறேன்” : நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், முதல் முறையாக மாபெரும் பிரமாண்ட மெய்நிகர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சரிய அனுபவம், இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சி அரங்கத்தை ஜூன் 1 ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கலைஞரின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ஜீவா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜீவா, "சினிமாவில் கலைஞர் ஐயாவின் அனுபவங்களைக் கண்டு வியந்திருக்கிறேன். முதலமைச்சராக மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர் கலைஞர்.

கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அவர் அரசியலில் செய்த சாதனைகள் என அனைத்தும் இங்கு மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலைஞர் ஐயாவே பேசுவது மிக அழகாக இருந்தது. கலைஞர் ஐயா குறித்து பயோபிக் எடுத்தால் நிச்சயம் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories